Friday, November 20, 2015

கணினி வேகமாக துவங்க....

altநம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க

No comments:

Post a Comment

Tips

What is forward and reverse DNS lookup? Forward DNS  lookup is using an Internet domain name to find an IP address. Reverse DN...